SUBRAMANIYA BHARATHIYAR
இன்று மகாகவி பாரதி
பிறந்தநாள்.......... அவரைப் பற்றி சிறு படைப்பு
"பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின்
ஆவேசம் சுருக்கென்று ஏறும் ; இந்தியன் நான் என்றிடும் இறுமாப்பு உண்டாம் "
- நாமக்கல் கவிஞர்
"பைந்தமிழ் தேர் பாகன்
செந்தமிழ் தேனீ
சிந்துக்கு தந்தை
குவிக்கும் கவிதை குயில்
இந்நாட்டினை கவிழ்க்கும் பகையை
கவிழ்க்கும் கவி முரசு
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
ஆறாம் பாட வந்த அறிஞன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் "
- பாரதிதாசன்
"பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின்
ஆவேசம் சுருக்கென்று ஏறும் ; இந்தியன் நான் என்றிடும் இறுமாப்பு உண்டாம் "
- நாமக்கல் கவிஞர்
"பைந்தமிழ் தேர் பாகன்
செந்தமிழ் தேனீ
சிந்துக்கு தந்தை
குவிக்கும் கவிதை குயில்
இந்நாட்டினை கவிழ்க்கும் பகையை
கவிழ்க்கும் கவி முரசு
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
ஆறாம் பாட வந்த அறிஞன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் "
- பாரதிதாசன்
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி கலைமகள் பெயராகிய பாரதி என்ற பட்டம் எட்டயபுர அரசவையால் வழங்கப்பட்டது.
- தன்னை "ஷெல்லிதாசன் " என்று அழைத்துக்கொண்டார்
- புனை பெயர்கள் : காளிதாசன் , ஷக்திதாசன் , நித்திய தீரர் , ஷெல்லிதாசன்
- தம் பூனூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடருக்கு அளித்தவர்.
- புதுக்கவிதையின் முன்னோடி
- பாரதியின் புதுக்கவிதையின் முன்னோடி வால்ட் விட்மன்
- தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்.
- கவிதையில் சுய சரிதம் எழுதிய முதல் கவிஞர்
- 14 மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.
- பாரதியின் முக்கிய நண்பர்கள் : பரலி நெல்லையப்பர்(தம்பி என்று பாரதியால் அழைக்கப்பட்டவர்), வ.ராமசாமி அய்யங்கார் (வ. ரா )
மகாகவி பாரதியார் - என்ற பட்டதை வழங்கி பாராட்டியவர் வ. ராமசாமி ஐயங்கார்
வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு திசம்பர் திங்கள் 11-ஆம் தேதி சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில்,(அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் ) பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல்1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
“
|
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
|
”
|
இலக்கியப் பணி
பாரதியாரின் அபூர்வ புகைப்படம்
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
- பாரதி.
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
தெங்கும் காணோம்" என கவிபுனைந்த
கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி,பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
தெங்கும் காணோம்" என கவிபுனைந்த
கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி,பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
· குயில் பாட்டு
· கண்ணன் பாட்டு
· பாஞ்சாலி சபதம் (முதல் மூன்று படைப்புகளும் முப்பெரும் பாடல்கள்)
· புதிய ஆத்திச்சூடி
· சுயசரிதை
· ஞானப் பாடல்கள்
· தோத்திரப் பாடல்கள்
· விடுதலைப் பாடல்கள்
· சந்திரிகையின் கதை
ஆகியன அவர் படைப்புகளில் சில.
வசன கவிதை "காட்சி '' என்ற தலைப்புடையது .
வசன கவிதை "காட்சி '' என்ற தலைப்புடையது .
- பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி சு. நெல்லையப்பர்.
- பாரதி பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி ஐயர்.
- பாரதி பாடல்களை A.V மெய்யப்ப செட்டியாரிடமிருந்து வாங்கி நாட்டுடைமையாக்கியவர் ஓமந்தூர் P ராமசாமி செட்டியார்.
- பாரதி சங்கத்தை தோற்றுவித்தவர் கல்கி.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினிஎன்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தேசியக் கவி
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்....
அதை அங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ"
"ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில் "
"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல் ".
"தருமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் "
பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே" என பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
பாரதி தன் அன்பு மனைவி கண்ணம்மாவுக்கு எழுதிய அற்புதமான பாடல் .
-
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்குஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாரதியார் நினைவுச் சின்னங்கள்
சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாகஎட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
பாரதியாரின் கையெழுத்து
மகாகவி
சி. சுப்பிரமணிய பாரதி | ||
பிறப்பு
| ||
இறப்பு
| ||
இருப்பிடம்
| ||
தேசியம்
| ||
மற்ற பெயர்கள்
|
பாரதியார், சுப்பையா, சக்தி தாசன் ஷெல்லிதாசன்
| |
பணி
| ||
அறியப்படுவது
|
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
| |
குறிப்பிடத்தக்க படைப்புகள்
|
பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, முதலியன.
| |
Influenced
| ||
அரசியல் இயக்கம்
| ||
பெற்றோர்
|
சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள்
| |
வாழ்க்கைத் துணை
| ||
http://animalsbirds.com/blyths-tragopan-beautiful-bird-images-photos-wallpaper/
ReplyDelete